மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப்
பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு வகுப்புகள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன; இந்தச் சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் டிசம்பர் 24, 25, 27 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் மட்டும் நடத்தக் கூடாது என்றும் மற்ற நாள்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகளைத் தூய்மைப்படுத்த உத்தரவு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த பள்ளிகளில் டிசம்பர் 26 முதல் 31 வரையிலான விடுமுறை நாள்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறைகளிலும், வகுப்பறைகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடரைத் தெளித்தும், தேவைப்பட்டால் தினக்கூலி பணியாளர்களை அமர்த்தியும் பள்ளிகளைச் சுத்தப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.