WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 8, 2015

10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம்
தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், 9-ஆம் வகுப்பில் இடையில் நின்றவர்கள், தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் (இ.எஸ்.எல்.சி.) தேர்ச்சிப் பெற்றவர்கள், திறந்தநிலைப் பள்ளியில் சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்கள் உள்ளிட்டோர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் 01.04.2016 -ஆம் தேதி பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பத்தை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். மையங்கள் குறித்த விவரங்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.