சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு செவ்வாய், புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை தொடர்வதால், பள்ளி, கல்லூரி வளாகங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக, விடுமுறை அறிவிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
பல குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும், பள்ளி மைதானங்களில் தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்றும் பணியும், சேதங்களையும் ஆய்வு செய்யும் பணியும் நடைபெறும் என கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
தொடர் மழை காரணமாக, நவம்பர் 6-ஆம் தேதிக்குப் பிறகு 3 நாள்கள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கியுள்ளன. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத்தேர்வு எழுதுவோரும் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.