WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 22, 2015

டிசம்பர் 24 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள், பள்ளி-கல்லூரிகள் கிடையாது.

தமிழகத்தில் டிசம்பர் 24ல் தொடங்கி தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. மத்திய
அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு குழு மிலாடி நபியை டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து டிசம்பர் 24-ம் தேதிக்கு(வியாழக்கிழமை) மாற்றியுள்ளது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. டிசம்பர் 26-ம் தேதி மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் விடுமுறை. தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. மேலும் கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. நீண்ட நாட்கள் விடுமுறைக்கு மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கிகளும் 4 நாட்கள் செயல்படாது என்பதால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.