டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (விஏஓ) பிப்ரவரி 28-ம்
தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஏஓ தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இட்தைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி நடக்க இருந்த விஏஓ தேர்வு பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக இந்த போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.
விஏஓ பணியில் சேருவோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது.
6 ஆண்டு விஏஓ பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.