WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 17, 2015

பாடப் புத்தகங்கள் இழந்த சுயநிதி பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதி.

மழையால் பாட நூல்களை இழந்த சுயநிதி பள்ளி மாணவர்கள், இணையதளம்
வாயிலாக புத்தகங்களை பதிவு செய்து தபால் மூலம் வீட்டு முகவரியிலேயே பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கடுமையான வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, பாடநூல்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மழை வெள்ளத்தில் பாடநூல்களை இழந்திருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தின் வழியாக பதிவு செய்து அவர்களின் வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.