வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும் புதுச்சேரி
மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்களுக்கு இன்றும் மற்றும் நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளம் சூழ்ந்துள்ளதை கருத்தில் கொண்டு, விடுமுறை அளிக்குமாறு தனியார் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.