WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 19, 2015

அரையாண்டுத் தேர்வை டிசம்பரில் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை.

அரையாண்டுத் தேர்வை டிசம்பர் மாதத்தில் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் கோவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 58-ஆவது குடியரசு தின மாநில தடகளப் போட்டியின் தொடக்க விழா கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் கண்ணப்பன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டுத் தேர்வுகள் வரும் ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதற்கும் முன்னதாக தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வை நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அறிவிப்பை மீறி டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.