உயர்கல்வியை சீர்குலைக்கும், 'காட்ஸ்' ஒப்பந்த்தில், இந்தியா கையெழுத்திடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:
உலக வர்த்தக அமைப்பு உறுப்பு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், 10வது மாநாடு, கென்யா தலைநகரில் நடந்து வருகிறது. சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய, 'காட்ஸ்' ஒப்பந்தத்தில், கையெழுத்திட வேண்டிய அபாயம், இந்தியாவுக்கு உள்ளது. இந்த உடன்படிக்கை யால், உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
இந்தியாவில் உள்ள, பல்கலைக் கழக மானியக் குழு, உயர் கல்வி தொழில் நுட்பக் குழு, மருத்துவ கவுன்சில் ஆகியன கலைக்கப்பட்டு, தற்சார்பு ஒழுங்கு முறை ஆணையங்கள் அமைக்கப்படும். இதனால், வெளிநாட்டு மூலதனம் வருவதோடு, இட ஒதுக்கீடு மற்றும் இந்திய மொழிகளுக்கு பங்கம் ஏற்படும்.
இந்திய பாடத் திட்டத்தை, அமல்படுத்த முடியாது; கல்வி முதலீடுகளைப் பாதுக்காக்கவே சட்டங்கள் உருவாக்கப்படும்.கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், எப்போதைக்கும், அதிலிருந்து பின் வாங்க முடியாது.
'ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், நாட்டின் உயர் கல்வித் துறைக்கு பேராபத்து ஏற்படும்' என, கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், இதையும் மீறி, பார்லிமென்ட் நடக்கும் வேளையில், அங்கு விவாதிக்காமல், ஒப்புதல் இல்லாமல், உடன்படிக்கையில் கையெழுத்திட, மத்திய அரசு முயற்கிறது.
எனவே, இந்த ஒப்பந்தத்திலிருந்து, மத்திய அரசு உடனடியாக விடுவித்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.