WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 20, 2015

புதிய இலவச பஸ் பாஸ் ஆசிரியர்களுக்கு உத்தரவு.

வெள்ளத்தில் தொலைந்து போன மற்றும் சேதமான இலவச பஸ் பயண அட்டையை மாற்றி தர, அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், மழை, வெள்ளப் பாதிப்பால் இழந்த ஆவணங்களுக்கு பதில், புதிய மாற்று பிரதி வழங்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கல்வித் துறை அதிகாரிகள், 'பள்ளி மாணவ, மாணவியர் வெள்ளப் பாதிப்பால், தங்கள் இலவச பஸ் பயண அட்டையை தொலைத்திருந்தால் அல்லது சேதமாக்கியிருந்தால், அவர்களுக்கு, போக்குவரத்து துறை மூலம், புதிய பயண அட்டையை தாமதமின்றி பெற்று தர வேண்டும்' என, அனைத்து அரசு, அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.