WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 20, 2015

10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:'மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 24ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், டிச., 24ம் தேதி மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், டிச., 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.தேர்வுத் துறையின் ஆன்லைன் சேவை மையங்களில், சரியாக பதிவுப்பணி நடக்கவில்லை என, சில இடங்களில் புகார் எழுந்துள்ளது. எனவே, முதன்மை கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட, கல்வி அதிகாரிகள், சேவை மையங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி 
உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.