மத்திய அரசின் பணிக்கு தேர்வு செய்யப்பட்டும் பணியாளர்களுக்கு நேர்காணல் நடத்துவதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிக்கான குரூப் சி மற்றும் பி (அரசிதழ் பதிவில்லாத) பதவிகளுக்கு நேர்காணல் நடத்துவதில்லை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அறிவித்தது.
இந்நிலையில் ஒரு சில பதவிகளுக்கு கட்டாயம் நேர்காணல் நடத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை விரும்பினால், அதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதை தெரிவித்த அமைச்சர், நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது பணியாளர் தெரிவு முறையில் நம்பகதன்மையை அதிகரிக்கும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.