WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 9, 2015

வெள்ளத்தில் தொலைந்த சான்றிதழ்களைப் பெற்றுத்தர உதவி மையம் திறப்பு.

                                           

சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அத்துடன் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் அடையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புக்களும் வெள்ளநீரில் மூழ்கின.


இரண்டு மாடி அளவிற்கு கூட வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். பலர் கிடைத்த பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, வீடுகளை விட்டு வெளியேறினர். ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், மழை ஓய்ந்ததாலும் வெள்ளநீர் வடிய துவங்கியது. ஆனால் வெள்ளநீரில் வீட்டில் இருந்த ரேஷன் கார்டு, கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், வீட்டு பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

காணாமல் போன கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திரும்பப் பெற்றுத்தர உதவும் வகையில் கோட்டூர்புரம் விநாயகர் கோயில் அருகே காவல்துறை சார்பில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆவணங்கள் மட்டுமின்றி, காணாமல் போன வளர்ப்புப் பிராணிகளை கண்டறிவதற்கும் புகார்கள் பெறப்படுகிறது.

தொலைந்த சான்றிதழ்களின் நகல்களை, விண்ணப்பித்தவர்கள் விரைந்து பெறவும், அதனைக் கொண்டு நிவாரணங்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.