WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 19, 2015

நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல்.

கருவூல 'சாப்ட்வேர்' குளறுபடியால் வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு
ஊழியர், ஆசிரியர்களுக்கு 'இ.சி.எஸ்.,' முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக கருவூலங்களில் 'வெப் பேரோல் சாப்ட்வேர்' பயன்படுத்தப்படுகிறது. தற்போது வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடம் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்காக ஒவ்வொரு ஊழியரிடமும் விருப்ப கடிதம் பெற வேண்டும். அவர்களின் டிசம்பர் மாத ஒரு நாள் ஊதியத்தை அந்தந்த துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் கணக்கில் பிடிக்க வேண்டும். பின் 'முதல்வரின் பொது நிவாரண நிதி' டி.டி.,யாக அனுப்ப வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கருவூல 'வெப் பேரோல் சாப்ட்வேரில்' அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் ஊதியத்தை துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கில் நேரடியாக செலுத்த வழியில்லை.இதனால் கருவூல அதிகாரிகள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.கருவூல அதிகாரி ஒருவர் கூறுகையில், “ துறைகளின் ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்கில் செலுத்த 'சாப்ட்வேரில்' வசதி இல்லை. இதனால் ஊதியத்தை பிடிக்க முடியவில்லை. இதில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.