மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட
நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.ஆனால், மழை பாதிப்பில்லாத மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட தென் மாவட்டங்களில் 'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில் டிச.,7 முதல் 23க்குள் தேர்வுகள் நடத்த முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு மாதிரி வினாத்தாள் தயாரிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின் மழை பாதிப்பு அதிகம். பல நாட்கள் விடுமுறை விடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில் பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
குழப்பம்
பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள் என்பதால் அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு அறிவிப்பு அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்த மாவட்டம் சார்பில் நடக்கும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் தெளிவான அறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.