WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 5, 2015

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்க மத்திய அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று
மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம் சேவை முடக்கம் என பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வங்கி சேவையையோ, ஏடிஎம் சேவையோ பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக டிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. வங்கிகளின் அலுவல் நேரத்தை நீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களை செயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.