WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 17, 2015

என்.எம்.எம்.எஸ்., விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய தேதி நீட்டிப்பு.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத் தேர்வுக்கு (என்.எம். எம்.எஸ்.,) மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங் களை
தலைமைஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய டிச., 24 வரை காலவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு 2016 ஜன., 23 ல் நடக்கிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை www.tndge.inஎன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. இவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தலைமைஆசிரியரிடம் சமர்ப்பித்தனர். பெறப்படும் விண்ணப்பங்களை தலைமைஆசிரியர்கள் அதே இணையதள முகவரியில் டிச., 14க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. தற்போது பதிவேற்றம் செய்யும் தேதி டிச., 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.