WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 24, 2016

டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 1மெயின் தேர்வு முடிவு தாமதம்.


தமிழகத்தில் குரூப்- 1 மெயின் தேர்வு முடிந்து ஆறுமாதமாகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் எழுதியவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1 முதல் நிலை தேர்வு கடந்த ஓராண்டுக்கு முன் நடந்தது. டி.எஸ்.பி., டி.இ.ஓ., சப் கலெக்டர், வணிகவரித்துறை ஆணையர், நகராட்சி கமிஷனர் உட்பட பல பதவிகளில், 79 காலியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வை, 2 லட்சம் பேர் எழுதினர். இதில், 4 1,000 பேர் மெயின் தேர்வுக்கு தேர்வாகினர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூனில் நடந்தது. இத்தேர்வு முடிந்து, ஆறு மாதங்களாகியும் இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. தேர்தல் வரும் நேரத்தில் தேர்வு முடிவுகள் கிடப்பில் போடப்படுமோ என்ற அச்சம் எழுதியவர்கள் மனதில் தொற்றிக் கொண்டுள்ளது.

2 comments:

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.