WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 24, 2016

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிக்கல்.


பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம்
முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை திரும்ப பெறும் பணியை கல்வித்துறை துவக்கியுள்ளது. தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கிராமப்புற தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளியில் இருந்து, ஆசிரியரை திரும்பப் பெற துவங்கியுள்ளனர். இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.