பொங்கல் பண்டிகையையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, இன்று உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு மாவட்ட
கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.அரையாண்டுத் தேர்வுகள் நடப்பதால், ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட கல்வித்துறை அனுமதித்துள்ளது. விடுமுறை அளித்துள்ள பள்ளிகளில், இன்று நடக்க இருந்த தேர்வுகளை 18ம் தேதியும், 18ம் தேதி நடக்கவிருக்கும் தேர்வுகளை 19ம் தேதி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடப்பதால், மற்ற வகுப்புகளுக்கும் விடுமுறை குறித்து அறிவிப்பு இல்லை.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.