''காலியாக உள்ள கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
சட்டசபையில்
நேற்று, கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
மார்க்சிஸ்ட் - பாலபாரதி: அரசு கல்லுாரிகளில், புதிதாக துவங்கப்பட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு போதிய ஆசிரியர் இல்லை. கவுரவ ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர். அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதோடு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
கவுரவ பேராசிரியர்களுக்கு, 6,000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களை நேரடியாக பணி நிரந்தரம் செய்ய முடியாது; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமே நிரந்தர பணியில் சேர்க்க முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.