WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 25, 2016

வெளிநாடு செல்ல அனுமதி ஆசிரியர்களுக்கு உத்தரவு.

தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் "பாஸ்போர்ட்' பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள்
கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாடு செல்ல விரும்பும் ஆசிரியர்கள், "பாஸ்போர்ட்' அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பு வதற்கு முன், அதற்கான தகவல் படிவத்தை நிரப்பி, கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பி, அனுமதி பெற வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆட்சேபனைக்குரிய ஆசிரியர்களின் விண்ணப்பம் இருந்தால், நிராகரிக்குமாறு, மண்டல "பாஸ்போர்'ட் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையின் கீழுள்ள ஆசிரியர்கள் மட்டுமின்றி, கல்வித்துறை ஊழியர் களும், வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் பட்சத்தில், கல்வித்துறை இயக்குனர் பார்வைக்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே, விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.