தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து, நடந்த ஆலோசனை கூட்டத்தில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்ட தலைவர் ராஜசேகரன் பேசியதாவது:ஆறாவது ஊதியக்குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்
களுக்கு வழக்கப்படும் ஊதியம் போல் சமமாக வழங்கப்படவில்லை. அதே போல் ஆறாவது ஊதிய குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள படிகளையும் வழங்கவில்லை.இப்படி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பல சலுகைகளை தமிழக அரசு வழங்காமல் உள்ளன. இவை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி, 30 முதல் பிப்., 1ம் தேதி வரை தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என, ஜேக்டோ முடிவு செய்துள்ளது. இவ்வாறு, ராஜசேகரன் பேசினார்.ஜேக்டோவின் மாநில துணைச்செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வீராச்சாமி, மாவட்ட செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.