WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 22, 2016

'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.


நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க
உள்ளது. பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச், 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிகளை பொறுத்து, 18 முதல், 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் ஆட்-கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணம், வயது வரம்பில் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சலுகை உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.ssconline2.gov.in அல்லது http://sscregistration.nic.in.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.