WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 26, 2016

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு... 15 நிமிடம் தாமதமானால் தேர்வு எழுத முடியாது.


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு, 15 நிமிடங்கள் தாமதமாக வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக
ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.காலணிக்கு தடை*பிளஸ் 2 தேர்வு அறைக்குள், மாணவர்கள் தங்கள் உடைமை களை கொண்டு செல்லக் கூடாது; தேர்வு அறை முன்பும் வைத்திருக்க கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம் * தேர்வு அறைக்கு அலைபேசி மற்றும் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது*பிட் அடித்தல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் *தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது. காலணிகளை வெளியே கழற்றி வைத்த பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்*தேர்வு அறைக்கு, 15 நிமிடம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது. இவ்வாறு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.