WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 7, 2016

29 டி.இ.ஓ.,க்கள் நியமனம்.

தமிழகத்தில் பல மாதங்களாக காலியாக இருந்த, 29 டி.இ.ஓ., பணியிடங்கள், ஒரே நேரத்தில் நிரப்பப்பட்டுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில், 64 சி.இ.ஓ., பணியிடங்களில், 22 இடங்கள்; கல்வி மாவட்ட
வாரியாக, 125 மாவட்ட கல்வி அதிகாரி இடங்களில், 40 இடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. இதனால், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் ஆயத்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து, நமது நாளிதழில், ஜன., 22ல் விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரி பணி மூப்பு பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை அவசரமாக பெற்று, அதிகாரிகளை தேர்வு செய்துள்ளது. இதில், தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில், 29 மாவட்டங்களுக்கு புதிய, டி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற 11 இடங்கள் டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் மூலம் நேரடி நியமனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின், 29 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சேலம், மதுரை மற்றும் ஈரோடு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களும், சென்னை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பணியிடமும் அடங்கும். இந்த நியமனத்தை வரவேற்கிறோம். அதேநேரம், காலியாக உள்ள, 22 சி.இ.ஓ., இடங்களையும் நிரப்ப வேண்டும்.சாமி சத்தியமூர்த்தி, தலைவர் - தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.