WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 2, 2016

தேர்வர்கள் வாடிக்கையாளரா? பல்கலை அறிவிப்பால் அதிர்ச்சி.?


உதவிப் பேராசிரியர் பணிக்கான மாநில தகுதித் தேர்வான, 'செட்' தேர்வு, பிப்., 21ல் நடக்கவுள்ளது. அரசு சார்பில், அன்னை தெரசா பல்கலை இந்த தேர்வை நடத்த உள்ளது. செட் தேர்வு அறிவிப்பு வெளியானது முதல், பல சர்ச்சைகள்
ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், செட் தேர்வு விண்ணப்பதாரர்களின் வழிகாட்டுதலுக்காக, தனி மையம் அமைக்கப்பட்டு, இணையதளத்தில் அதற்கான மொபைல் போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அந்த அறிவிப்பில், 'வாடிக்கையாளர் உதவிக்கு' என்ற பொருளில், 'கஸ்டமர் சப்போர்ட்' என குறிப்பிட்டு உள்ளனர். இது குறித்து, முதுகலை பட்டதாரிகள் கூறியதாவது: ஏற்கனவே, செட் தேர்வு முடிவுகளில், பல்கலைகள் மற்றும் மாநில உயர் கல்வி அதிகாரிகளின் தலையீடு உள்ளதாக, சந்தேகம் உள்ளது; தேர்வு நடைமுறையிலும் குழப்பம் உள்ளது. இந்நிலையில், தேர்வர்களை, 'வாடிக்கையாளர்' என, குறிப்பிட்டுள்ளதன் மூலம், தேர்வு முடிவுகள் விற்பனை செய்யப்படுமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, நியாயமான தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.