WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 5, 2016

2,175 பணியிடம்:மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர், உதவியாளர் உட்பட, 2,175 புதிய ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கு, 'மின் வாரிய இணையதளத்தில், மார்ச், 2 முதல் விண்ணப்பிக்கலாம்' என, மின் வாரியம் ஏற்கனவே அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வசதி துவங்காததால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், 'தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; கட்டணம், கடைசி தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள், இணைய தளத்தில் தெரிவிக்கப்படும்' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.