WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 20, 2016

4.50 லட்சம் தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள, 4.50 லட்சம் ஊழியர்கள், தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 3 லட்சம் பேர்; போலீசார், 75 ஆயிரம் பேர்; டிரைவர்கள், கிளீனர்கள், 75 ஆயிரம் பேர் என, மொத்தம், 4.50 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் அனைவரும் தபால் ஓட்டு போட, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தபால் ஓட்டு போடுவோர், தபால் ஓட்டு பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.