WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 21, 2016

வேதியியலில் 6 மதிப்பெண் ஆசிரியர்கள் வலியுறுத்தல்.


பிளஸ் 2 வேதியியல் தேர்வில் இடம்பெற்ற குழப்ப வினாக்களுக்காக மாணவர்களுக்கு 6 மதிப்பெண்கள் வழங்க வேண்டும், என, தமிழ்நாடு பதவி
உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மதுரையில் அச்சங்க மாநில துணை தலைவர் முகிலன் கூறியதாவது: மார்ச் 14ல் நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் இடம் பெற்ற 18வது வினா பாடத்திட்டத்தில் இல்லை. பத்து மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட கட்டாய வினா பகுதியும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான கட்ஆப் பாதிக்கும். எனவே இக்கேள்விகளை எழுத முயற்சித்து இருந்தாலே 6 மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுத்துறை இயக்குனருக்கு இது தொடர்பான மனு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.