மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த 6–வது ஊதியக்குழு பரிந்துரையில் அகவிலைப்படி உயர்வை நிர்ணயிக்க தனி கணக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது. கடந்த ஜனவரி 2015 முதல் டிசம்பர் வரையில் சராசரி நுகர்வோர் குறியீட்டு எண். 6.73 சதவீதமாக உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பான மத்திய மந்திரிசபையின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் இணைந்து அகவிலைப்படி விகிதம் தற்போதுள்ள 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக உயர்த்தப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1–ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதனால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலன் அடைவர். மேலும் 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பலன் கிடைக்கும். அதேபோல், மத்திய மந்திரிசபையில் தேசிய மூலதன பொருட்கள் கொள்கைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மூலதனப் பொருட்கள் தேசியக் கொள்கை தயாரிக்கப்பட்டு அமைச்சகத்தின் வலைதளத்தில் ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் அக்கறையுள்ளோர் கருத்துக்களுக்கென வெளியிடப்பட்டிருந்தது. மூலதன பொருட்கள் துறையில் உற்பத்தி, தேவை, தரம், தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை உயர்த்துவதை நோக்கமாக கொண்டது இந்த கொள்கை. உரிய அமைப்புகள், திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கி நோக்கம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.