வேலை வாய்ப்பை அதிகரிக்க பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம்
செய்யப்படுகிறது.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரக சுற்றறிக்கை: தமிழகத்தில் 41 அரசு பாலிடெக்னிக், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் உள்பட 490க்கும் அதிகமான பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. பாலிடெக்னிக் பாடத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். கடந்தாண்டு முதலாமாண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது.
படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் இந்த புதிய பாடத்திட்டத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள், தொழில் நுட்ப வளர்ச்சிகள்,உலகளவில் பிரபலமாகி வரும் நானோ டெக்னாலஜி, ரோபாடிக்ஸ் குறித்தும் புதிய பாடத்திட்டத்தில் பாடங்கள் சேர்க்கப்பட்டன.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக மாற்றவும் இந்த புதிய பாடத்திட்டம் வகை செய்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.