WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 8, 2016

பள்ளி 'மேப்'பிலும் ஜெ., படம்:தேர்தல் விதியால் நீக்கப்படுமா?

பள்ளி வகுப்பறைகளில் உள்ள, 'மேப்'பிலும் முதல்வர் ஜெ., புகைப்படத்தை நீக்கி, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள, 'மேப்'பில், முதல்வரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதியின்படி, அரசு அலுவலகங்களில், முதல்வரின் புகைப்படம் அகற்றப்பட்டு வரும் நிலையில், வகுப்பறை மேப், புத்தக பைகளில் ஒட்டப்பட்டுள்ள முதல்வரின் புகைப்பட ஸ்டிக்கரை என்ன செய்வது என, தெரியாமல், ஆசிரியர்கள் குழம்பி போய் உள்ளனர். ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், ''தேர்தல் நன்னடத்தை விதி, அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். ஆகவே, வகுப்பறையில் தொங்கும் மேப்பிலும், முதல்வரின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும். ''ஏன் என்ற கேள்வி, மாணவ, மாணவியர் மத்தியில் எழும். அப்போது, ஆசிரியர்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கற்பிக்கலாம். வகுப்பறைகளில் இத்தகைய மலிவான விளம்பரம் தேடுவதை, இனியாவது அரசியல் கட்சியினர் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.