WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 6, 2016

10ம் வகுப்பு விடைத்தாள் 16 முதல் திருத்தும் பணி.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில்,
81 மையங்களில் தனித்தேர்வர் உட்பட, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதி வருகின்றனர். நாளை, அறிவியல்; 11ல் சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது. 13ல், விருப்ப பாடத்துடன், பொதுத்தேர்வு நிறைவடையும். திருப்பூர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், விடைத்தாள் திருத்தும் பணி, 16ல் துவங்குகிறது; 16 மற்றும், 17ல் முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்களுக்கு, விடைத்தாள் திருத்தும் பயிற்சி வழங்கப்படும். 18 முதல், மொழித்தாள் பாட விடைத்தாள் திருத்தப்படும்; 1,500 உதவி தேர்வர்கள், இப்பணியில் ஈடுபடுவர். இம்மாதம், 1ல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி, 25க்குள் முடியும் என, ஏற்கனவே கூறப்பட்டது; 15 நாட்கள் தாமதமாக துவங்குவதால், பணி நிறைவடைய, கூடுதல் நாட்கள் தேவைப்படும். மே இரண்டாவது வாரத்தில், இப்பணி நிறைவடைய வாய்ப்புள்ளது. மே, 20க்கு பின், தேர்வு முடிவு வெளியாகலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.