WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 6, 2016

குரூப்-2ஏ பணிக்கு 4-வது கட்ட கலந்தாய்வு ஏப்.12, 13-ம் தேதிகளில் நடக்கிறது.

நேர்காணல் அல்லாத உதவியாளர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 29.6.2014 அன்று எழுத்துத் தேர்வு
நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இதுவரை 3 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில் 4-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஏப்ரல் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் துறைவாரியான காலியிடங்கள் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.