WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 30, 2016

தமிழாசிரியர்களுக்கு 10 மாத பயிற்சி: விருப்பப்பட்டியல் சேகரிப்பு.

மத்திய அரசு சார்பில், மைசூரில் நடக்கும், பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்பாடுத்த, ஆசிரியர்களுக்கு, பத்து மாதம்
பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும், அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்து, ஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. மைசூரில் உள்ள தென்னிந்திய மொழிக்கல்வி மையத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், தமிழ்மொழிக்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களில், 44 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விருப்பம் உள்ள தமிழாசிரியர்களின் விண்ணப்பங்களை சேகரித்து, இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஜூலை, 4ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி, 2017 ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பயணப்படி, அகவிலைப்படி உள்ளிட்டவற்றையும், மண்டல மொழிக்கல்வி மையம் ஏற்றுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.