WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 30, 2016

ஏற்கனவே அறிவித்தபடி நாளை மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடக்கும்: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) நடத்த வேண்டும் என்று அனில் ஆர்.தவே தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டது. இந்த ஆண்டே நுழைவுத்தேர்வை நடத்த
உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சங்கல்ப் அறக்கட்டளை தொடுத்த ‘ரிட்’ வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) 2 கட்டங்களாக மே 1-ந்தேதியும், ஜூலை 24-ந்தேதியும் நடத்த அந்த அமர்வு, உத்தரவிட்டது. தேர்வு முடிவுகளை ஆகஸ்டு 17-ந்தேதி வெளியிடவேண்டும்; செப்டம்பர் 30-ந்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த பொது நுழைவுத்தேர்வால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கிராமப்புற மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகிற நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள கால அவகாசம் தேவை என்றும், மாநில மற்றும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதால் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் மாணவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க இன்று மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவில் எந்த மாற்றமும் மேற்கொள்ள முடியாது. முன்பு அறிவித்த தேதிகளில் (மே-1 மற்றும் ஜூலை 24) தேர்வு நடைபெறும் என்று உறுதிபட தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.