தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது.
10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாக உள்ளன. இரு தினங்கள் கழித்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருந்தன. ஆனால், பாடங்களின் உள்பகுதியிலிருந்து பல கேள்விகள் இடம் பெற்றதால், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில், சென்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையலாம்.
மொழி பாடங்களில் சென்டம் வழங்க, மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என, விடைத்தாள் திருத்தத்தின் போது, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. எனவே, மொழி பாடங்களிலும் சென்டம் பெறுவோர் எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.