WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 23, 2016

அரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்.


அரசு பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை டி.என்.பி.எஸ்.சி., மூலம் துறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தந்த அலுவலக பணிக்கேற்ப, வினாத்தாள்கள்
தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும். இதில், தேர்ச்சி பெறுவதன் மூலம், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்பதால், அரசு பணியாளர் கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வர். இந்த தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை, 24ம் தேதி துவங்குகிறது. 31ம் தேதி வரை நடக்கும் தேர்வுக்கு, கடந்த மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தங்களது விவரங்களை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.