WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 6, 2016

மே 17-ல் பிளஸ் 2; மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 17-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும், மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியாகும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ம் தேதி காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகும்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு மே 25-ம் தேதி காலை 9.31 மணி முதல் 10.00 மணிக்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் அறியலாம். அதுதவிர ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையத்திலும், அனைத்து மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ம் தேதியே முடிவடைந்துவிட்டது. அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.