WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 6, 2016

மே 17 ல் பிளஸ் 2 - மே 25 ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ; ஒரு வழியாக தேதி வெளியானது.


சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாளான வரும் மே 17 ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் நடப்பதால் தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2
பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ல் , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 39 ஆயிரம் பேர், பத்தாம் வகுப்பு தேர்வை 10. 72 லட்சம் பேர் எழுதினர். ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழு பறி ஏற்பட்டு வந்தது. முடிவுகள் எப்போது வரும் என மாணவ, மாணவிகள் தேதி தெரியாமல் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 25ம் தேதி காலை 9.31 முதல் 10 மணிக்கு வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முடிவுகள் அரசு தேர்வு துறை www.tnresults.nic.in இணையத்தில் வெளியாகும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.