WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 1, 2016

மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு?

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயி ரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்தவுடன், 64 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த மார்ச் 14-ஆம் தேதி தொடங்கியது.  இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி பெரும்பாலான மையங்களில் கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை "பார்கோடு' மூலமாக கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்தது. பின்னர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் மதிப்பெண்களை தொகுக்கும் பணியும், சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்துப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?: மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு (மே 16) பிறகு, மே 23 அல்லது 24-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.