WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 2, 2016

110 வன அதிகாரி பணியிடங்களுக்கான பணித் தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

2016-ஆம் ஆண்டுக்கான 110 இந்திய வன அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. விளம்பர எண்.: 09/2016-IFoS தேர்வு: Indian Forest Service Examination-2016 மொத்த காலியிடங்கள்: 110 வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.08.2016 தேதியின்படி 21 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பினர் 33 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் Animal Husbandry Veterinary Science, Geology, Botany , Chemistry, Mathematics, Physics, Statistics, Zoology துறையில் பட்டப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு அகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். முதல்நிலை தேர்வு மையங்கள்: பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, திருச்சி, வேலூர். விசாகப்பட்டினம். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் அல்லது ஆன்லைனில் முறையில் செலுத்தலாம். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.05.2016 பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 26.05.2016 விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2016 முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 07.08.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/IFS/IFS_P_2016_Notification_Engl.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.