WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 3, 2016

ஆசிரியர் பதவி உயர்வு ஊதியம் நிர்ணயிப்பதில் புது உத்தரவு.

இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று ஊதியம் நிர்ணயிக்கும்போது, தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியமாக ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் பட்டதாரி ஆசிரியர், தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது, ஊதியம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. சில உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாக ஊதியம் நிர்ணயிப்பதால் இயக்குனரகத்திற்கு தொடர்ந்து புகார் சென்றப்படி உள்ளன. இந்த குழப்பத்திற்கு தற்போது தொடக்கக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், தொடக்கப் பள்ளி தலைமைஆசிரியராக பதவி உயர்வு பெற்று, ஊதியம் நிர்ணயிக்கும்போது தனி ஊதியம் ரூ.750 யையும் சேர்த்து கணக்கிட வேண்டும். மேலும் தனி ஊதியத்தை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி, ஓய்வூதியத்திற்கும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். 2011 ஜன., 1 க்கு பின் தேர்வுநிலை பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் 3 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும். தர ஊதியத்தில் மாற்ற செய்ய கூடாது. தொடர்ந்து தனி ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.