பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக, மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
பிளஸ் 2 தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் நிறைவடைந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 186 பள்ளிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து, 240 மாணவர்கள்; 12 ஆயிரத்து, 502
மாணவியர் என, 22 ஆயிரத்து, 742 பேர் மற்றும் தனித்தேர்வர்கள், 836 பேர் என, மொத்தம், 23 ஆயிரத்து, 578 பேர் எழுதினர்.
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, தாராபுரம் விவேகம் பள்ளிகளில், விடைத்தாள் திருத்தி, மதிப்பீடு செய்யும் பணி நடந்தது. மதிப்பெண் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு,
"சிடி' மூலம், அரசு தேர்வுகள் இயக்ககம் வசம் ஒப்படைக்
கப்பட்டது.
தேர்வு முடிவை எதிர்பார்த்து மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் மற்றும்
பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ல் வெளியானது. அதேபோல், நடப்பு ஆண்டும் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசு தேர்வுத்துறை இயக்ககத்தில் இருந்து, இதுவரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 அல்லது, 10ல் வெளியாகலாம் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு, காத்
திருக்கிறோம்' என்றார்.
தேர்வும், தேர்தலும்
தற்போது, சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. 16ல் ஓட்டுப்பதிவு, 19ல், தேர்தல் முடிவும் வெளியாக உள்ளது. பொதுமக்கள் தரப்பில், எந்த கட்சி வெற்றி பெறும்; அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை தெரிய, ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
அதேபோல், பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது வெளியாகும்; மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் பள்ளிகள் எது, மாணவ, மாணவியர் யார் என்பதை அறிய, பெற்றோரும், ஆசிரியர்களும் கல்வி நிறுவன நிர்வாகிகளும் மிகவும் ஆர்வமாக, தேர்வு முடிவை எதிர்பார்த்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.