WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 30, 2016

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர ஜூன் 20 கடைசி நாள்.


அரசு தொழிற்பயிற்சி நிலையமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர, ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள்
நடத்தப்படுகின்றன. இதில், பல பொறியியல் சார்ந்த, பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர், இதில் சேர முடியும். இதற்கு, இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ஜூன் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 'மாவட்டம் வாரியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.