WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 30, 2016

ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லை.


ஆசிரியர்களுக்கு வாசித்தல் பழக்கம் இல்லாதது கவலைக்குரியது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய கல்வி
ஆண்டில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார். அதன் முக்கிய அம்சங்கங்கள்: பள்ளி திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தம் செய்து, பராமரித்திருக்க வேண்டும் கடந்த ஆண்டை விட, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைவாக மாணவர் உள்ள பகுதிகளில், வீடு வீடாகச் சென்று, கல்வி கற்க வராத மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் ஒவ்வொரு நாளும் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்பது குறித்த, பாடத்திட்டத்தை வாரத்தின் முதல் நாளே ஆசிரியர்கள் தயார் செய்து, தலைமை ஆசிரியர் பார்வைக்கு அனுப்ப வேண்டும் நீதி போதனை வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மற்றும் எழுத்து பயிற்சியை அதிகரிக்க வேண்டும் ஆசிரியர்களும், தங்கள் வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; பல ஆசிரியர்கள், வாசிப்பில் ஆர்வம் காட்டாதது கவலைக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.