காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடக்க உள்ள தேதிகளை, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மின் வாரியத்தில் காலி
பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், ஏப்., - மே மாதங்களில் நடக்க இருந்த எழுத்து தேர்வு, தேர்தல் நடத்தை விதி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விவரம், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தற்போது, 200 டைப்பிஸ்ட், 50 உதவி வரைவாளர், 25 இளநிலை தணிக்கையாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, ஜூன் 19ல் எழுத்து தேர்வு நடக்கும்.
இதை தொடர்ந்து, 250 இளநிலை கணக்கீட்டாளர், 25 சுருக்கெழுத்தர், 100 டெஸ்டர், 900 கள உதவியாளர், 100 இளநிலை உதவியாளர், 500 தொழில்நுட்ப உதவியாளர் எலக்ட்ரிக்கல், 25 தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல் பணியிடங்களுக்கு, இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, ஆக., 27, 28ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடக்கும். விண்ணப்பதாரர்கள், விரிவான கால அட்டவணை பற்றிய தகவல்களை, tangedco.directrecruitment.in/ www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.