WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 4, 2016

'எமிஸ்' பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அவதி.

கல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த, 2012-13ம் ஆண்டில், கல்வி மேலாண்மை தொகுப்பு (எமிஸ்)க்காக, மாணவ, மாணவியரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது. இதில், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர், உடன் பிறந்தவர்கள், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். சேகரிக்கப்படும் விவரங்களை கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஆன்லைனில், விவரங்களை பதிவேற்றம் செய்வதில், பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தது. சர்வர் கோளாறு காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக, இப்பணியை செய்து முடிக்க, கல்வித்துறை அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: ஆன்லைனில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள், சர்வரில் அப்டேட் செய்யப்படவில்லை. ஆதார் எண் சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வருமானம் உள்ளிட்ட விரங்களையும் சேகரித்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் விணிரங்களை சேகரிப்பதில் சிக்கல்கள் உள்ளன. மேலும், இவற்றில் பழைய போட்டோக்களே உள்ளது. அதை மாற்ற நடவடிக்கை இல்லை. இதனால், தற்போது அவசர அவசரமாக நடக்கும் பணிகளும் முழுமையடைய போவதில்லை. மே முதல் வாரத்துக்குள் பணியை முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.