WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 2, 2016

பிளஸ் 2: விடைத்தாள் நகல் கோருவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசி.


பிளஸ் 2 தேர்வு எழுதி, விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சனிக்கிழமை (ஜூன் 4) மாலை
5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் scan.tndge.in என்ற இணையதள முகவரியில், ஜூன் 4-ஆம் தேதி வரை தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற இணைப்பைத் தேர்வு செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களின் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரொக்கமாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.